பூமியின் வட துருவமான, ஆர்க்டிக் பகுதியின் வான்வெளியில் ஓசோன் மண்டலத்தில், ஓட்டை விழுந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் வட துருவத்தில், ஸ்காண்டி நேவியா, ரஷ்யாவின் வட பகுதி மற்றும் கிரீன்லாந்து ஆகியவை அடங்கிய பகுதி ஆர்க்டிக் என அழைக்கப் படுகிறது. சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் வகையில் பூமியைச் சுற்றி ஓர் உறை போல் ஓசோன் மண்டலம் அமைந்துள்ளது.
ஓசோன் மண்டலத்தைப் பற்றிய ஆய்விற்காக, ஜப்பான் உள்ளிட்ட ஒன்பது நாடுகளின் விஞ்ஞானிகள் இணைந்த ஒரு குழு செயல்பட்டு வருகிறது.
இக்குழு சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, ஆர்க்டிக் துருவத்தின் மேல் பகுதியில், ஓசோன் மண்டலத்தில் மிக பெரிய ஓட்டை விழுந்துள்ளதை கண்டுபிடித் துள்ளனர்.
0 comments:
Post a Comment