ஒவ்வொரு ஆண்டிலும் கலாநிதி எ.எம்.எ. அkஸின் நினைவு தினம் அன்னார் மறைந்த நாளான நவம்பர் 24 ஆம் திகதி இடம்பெற்று வந்தது. இந்த ஆண்டில் அன்னாரின் நினைவு தினத்தை அவருடைய பிறந்த தின நூறு ஆண்டுகள் பூர்த்தியாமும் ஒக்டோபர் 4 ஆம் திகதியன்று கொண் டாடுவதற்குக் கலாநிதி எ.எம்.எ. அkஸ் மன்றம் தீர்மானித்துள்ளது. என்னுடைய அதிபராகவும், பல்துறை விற்பன்னராகவும் ஒரு மாமேதையாகவும் திகழ்ந்துள்ள கலாநிதி எ.எம்.எ. அkஸ் அவர்களைப் பற்றிய இந்த ஆக்கத்தை எழுதுவதை நான் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
பலபிட்டிய நகரில் அமைந்துள்ள சித்தார்த்த கல்லூரியில், சிங்கள மொழி மூலம் என்னுடைய ஆரம்பக் கல்வியைத் தொடங்கி ஐந்து வருடங்கள் அங்கே செலவிட்ட என்னை என்னுடைய பெற் றோர்கள் எனக்கு ஆங்கிலக் கல்வியை ஊட்ட வேண்டுமென்ற நோக்கத்துடன் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் 1946 ஆம் ஆண்டு செப்டம்பரில் சேர்த்தார்கள். அங்கு சேர்க்கப்பட்ட நான் விடுதியில் தங்கி இருந்து கல்வியைத் தொடர்ந்தேன். அன்றைய காலப்பகுதி இலங்கைக்கு பல காரணங்களால் முக்கியமாக விளங்கியது. இலங்கைக்குச் சிறிதளவு சேதத்தை விளை வித்த இரண்டாவது உலக மகாயுத்தம் 1945 இல் முடிவுற்றிருந்தது. 1946 இல் கலாநிதி ரி.பி ஜாயா அவர்களே கொழும்பு ஸாஹி ராக் கல்லூரியின் அதிபராகச் சேவையாற் றினார். கலாநிதி அkஸ் அதிபராக ஸாஹி ராக் கல்லூரிக்கு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஸாஹிராவில் பின் ஆரம்ப வகுப்புகளில் கற்று வந்தேன்.
கலாநிதி ஜாயாவின் பதவிக்கால இறுதிக் கட்டத்திலும், கலாநிதி அkஸின் பொன் யுகம் எனக் கணிக்கப்பட்ட காலப் பகுதி யில் முதல் ஐந்து வருடங்களும் நான் கல்வி கற்கும் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற்றிருந்தேன். என்னுடைய கல்லூரி கற்கை 1953 இல் முடிவுற்றது நான் ஒரு சிறுவனாக இருந்த போதிலும், கல்லூரியின் அதிபர் பதவி கலாநிதி ரி.பி. ஜயாவிடமிரு ந்து கலாநிதி அkஸ¤க்குக் கைமாறிய நிகழ்வு, ஒரு மாபெரும் குதூகல நிகழ்ச்சி யாக இருந்ததை நான் இன்னும் நினைவு கூருகின்றேன். புதிதாகச் சுதந்திரம் பெற்றுக் கொண்ட இலங்கை நாட்டின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனாநாயக நேரடியாக வருகைதந்து சிறப்பித்த இந்த நிகழ்ச்சி, ஸாஹிராக் கல்லூரியின் அதிபரின் அலுவலகத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் அனேக அழகான புகைப்படங்களில் பதிவு செய்யப்பட்டு காட்சியளிக்கின்றன.
கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பெரும் மதிப்புக் கும், மரியாதைக்கும் உட்பட்டு விளங்கிய வர் கலாநிதி ரி.பி.ஜயா. கலாநிதி அkஸ் அதிபராகப் பதவி ஏற்ற முதலாம் நாளிலி ருந்து அன்னாரின் உயர்ந்த தோற்றம், கவர்ச்சிரமான ஆளுமை ஆகியவை அனைவரினதும் கவனத்தையும் மரியாதை யையும் அவர் பால் ஈர்த்தன. அன்றைய காலகட்டத்தில் ஸாஹிராக் கல்லூரி மாணவர் களாக இருந்த நாங்கள், எங்களுடைய அதிபர் அkஸ் தன்னுடைய மோட்டார் வாகனத்தில் இருந்து, கல்லூரி வாசலில் இறங்கி நம்பிக்கையுடனும் உற்காசத்துடனும் ஆர்வத்துடனும் நிமிர்ந்த நெஞ்சுடன் கம்பீரமாகக் கல்லூரிக்கு நடந்து வருவதைக் கண்டு களித்துள்ளோம். அன்னாரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு பார்வையும், ஒவ்வொரு சொல்லும் இளம் மாணவர்களாகிய எங்களைப் பரவசத்தில் ஆழ்த்தின. அவருடைய அழகிய தோற் றத்தை அன்னார் எப்போதும் அணியும் தூய்மையும் எடுப்பானதுமான மெல்லிய நிற உடை மேலும் மெருகூட்டிக் காட்டின.
1911 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த அkஸ், 1916 இல் அல்லாபிச்சை குர்ஆன் மத்ரசாவில் இணைந்து புனித குர்ஆனை வாசிக்கக் கற்றுக் கொண்டார். 1920 இல் முஹம்மதியா கலவன் பாட சாலையில் தமிழ் மொழி மூலம் மூன்றாம் வகுப்பில் சித்தி அடைந்தார். 1921 இல் யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயத்திலும், 1923 இல் யாழ். இந்துக் கல்லூரியிலும் தன்னுடைய கல்வியைத் தொடந்தார். அkஸ் அவர்கள் சிறு வயதிலேயே தன்னுடைய வயதை ஒரு வருடத்தினால் விஞ்சும் மேதாவித்தன்மையைக் கொண்டி ருந்தார். அவருடைய பல்கலைக்கழகப் பிரவேசம் கூட 1928 இல் வயது குறைந்த காரணத்தினால் இடம்பெறாமல், ஒரு வருடம் தாமதித்தே இடம்பெற்றது. அந்த ஒரு வருடத்தை அவர் கொழும்பு பரிசுத்த ஜோசப் கல்லூரியில் செலவிட்டார். வளரும் பயிர் முளையில் தெரிவது போல அன்னார் ஆரம்பத்தில் மத்ரசாவில் மெளலவிகளிடமிருந்தும், இந்து மதப் பாடசாலை ஆசிரியர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டிருந்த சமூகக் கலாசார மத அறிவு சார் அனுபவங்கள் பின்னால் அவருக்கு வலுவூட்டும் அம்சங்களாகத் திகழ்ந்தன. அவர் கற்றுக்கொண்டிருந்த தமிழ் மொழி அவருடைய பின்னைய காலத்தில் அவரைத் தூண்டித் துலக்கிப் பிரகாசிக்க வைத்தது. தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் வானொலியில் தினமும் இந்து சமயப் பாடல்களை (தேவாரங்கள்) கேட்டு மகிழ்ந்தார். பேசினால் வாய் மணக்கும் செந்தமிழில் அவர் சிறந்த பயிற்சியைப் பெற்றிருந்தார்.
லண்டன் பல்கலைக்கழகத்தினால் இலங்கையில் நடத்தப்பட்ட பரீட்சையில் 1933 ஆம் ஆண்டில் வரலாற்றுத் துறை யில் சிறப்புப் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகப் பரீட்சையில் சிறந்த பெறு பேறுகளைப் பெற்ற அன்னாருக்குக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பட்டப்பின் படிப்புக்கான புலைமைப் பரிசில் ஒன்றை வழங்கியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் திற்குச் செல்வதற்கு முன்பு அன்று அதி பிரபலம் பெற்றிருந்த சிவில் சேவைப் பரீட்சை எழுதியிருந்தார்.
கோம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பைத் தொடர்ந்து கொண்டி ருந்த வேளையில், இலங்கைச் சிவில் சேவைப் பரீட்சை முடிவுகள் வெளியாகின. அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட அப்பரீட்சையில் சித்திபெற்றுத் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பேரில் அkஸ் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது மட்டுமல்லாமல், இலங்கையின் முதல் முஸ்லிம் சிவில் சேவை அதிகாரியாகத் திகழும் அரும்பேறையும் பெற்றார்.
இலங்கைச் சிவில் சேவை கடேற் இளவல் அலுவலராக 1935 இல் நியமனம் பெற்ற அவருடைய நிர்வாகத்திறமை அன்றைய தீர்மானம் எடுக்கும் அலுவலர் களைப் பெரிதும் கவர்ந்தது.
நுண்ணிய அறிவையும் வலுமிக்க ஆற்றலையும் கொண்டிருந்த அkஸ் பல பதவிகளை பொறுப்புணர்வுடன் வகிப்பதற் குத் தெரிவு செய்யப்பட்டார். மாத்தளை நகரில் தன்னுடைய பொதுச் சேவையை ஆரம்பித்த அkஸ் கண்டி உதவி அரசாங்க அதிபராக சுகாதாரத் திணைக் களத்தின் மேலதிகச் செயலாளராக, சுங்கத் திணைக்களத்தில் மேலதிக இறங்குதுறை ஆய்வாளராக, கல்முனையில் உதவி அரசாங்க அதிபராக, மேலதிகத் தாபனக் கட்டுப்பாட்டாளராக சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் (அமைச்சராக இருந்த அவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டார நாயக்க) மேலதிகச் செயலாளராகப் பல பதவிகளில் திறம்படப் பணியாற்றிப் பலருடைய பாராட்டுக்களையும் பெற்றார்.
கல்முனையில் அவசரமாக நிறுவப்பட்ட கச்சேரிக்குப் பொறுப்பாக கடமையேற்ற அkஸின் சேவைக்காலம் அதி முக்கிய மாக அமைந்தது. கல்முனை முஸ்லிம் மக்களின் வறுமையான வாழ்க்கை அன்னாரை மிகவும் கவலையில் ஆழ்த்தி யது. அவர் ஏழை மக்களின் நலனுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்த ஒரு திருப்பமாகவும் இதைக் கொள்ளலாம். கல்முனை மக்களின் நலனை ஓங்க வைக்க அவர் அயராது உழைத்தார். இந்தக் கடும் உழைப்புக்குக் காரணமாகக் கல்முனைப் பகுதி “கிழக்கின் நெற்களஞ்சியசாலை” என வர்ணிக்கப்பட் டது. நன்றிக் கடனாக கல்முனை மக்கள் அங்குள்ள சில விவசாயக் கண்டங்களை இன்னும் “அkஸ் துரைக் கண்டம்” என வாஞ்சையுடன் அழைக்கின்றனர். 1948 இல் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் பதவியை வகிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை மதித்து அவர் தன்னுடைய ஒப்பும் உயர்வு மற்ற சிவில் சேவைப் பதவியைத் துறந்தார்.
கலாநிதி அkஸின் வரலாற்றைப் படிக்கும் ஒருவர், அவர் கொண்டிருந்த ஒரு சிறப்பான இயல்பை அறிந்து கொள்ள முடியும். அவர் எதையும் துல்லியமாகத் திட்டமிடவும், அதைத் திறம்படச் செயற்படுத்தவும் ஆற்றல் பெற்றிருந்தார். “திட்டமிடத்தவறுதல், தவறுதலுக்குத் திட்டமிடுதல்” எனும் பிரபல வாசகத்தை அவர் தனது வழிகாட்டியாகக் கொண்டிருந்தார். அவரிடம் சாதாரண திட்டங்கள், நடுத்தரத் திட்டங்கள் மற்றும் பாரிய திட்டங்களும் இருந்தன. ஸாஹிராக் கல்லூரியை ‘இஸ்லாமியக் கலாசார ஒளிவீசும் நிலையமாக மாற்றியமைக்க அவர் திட்டமிட்டிருந்ததும் இத்திட்டங்களில் அடங்கும்.
ஆங்கிலத்திலும், தமிழிலும் சரளமாக வும், துல்லியமாகவும் பேசும் பேராற்றலைக் கொண்டிருந்தார். அவர் ஒரு சிறந்த பேச்சாளராகவும் கேட்போரின் கவனத்தை ஈர்கும் ஆற்றலையும் கொண்டிருந்தார்.
மனித நேயப் பண்புகளைக் கொண்டிருந்த அkஸ் அரும் பெரும் திட்டங்களைத் தன்னுடைய தூர நோக்காகக் கொண்டிருந்தார். ‘கல்வியின் மூலமாக மட்டுமே முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டை உயர்த்த முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அவர், 1945 இல் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியை உருவாக்கினார்’ இதன் மூலமாக அநேக வசதி குன்றிய மாணவர்கள் உதவி செய்யப்பட்டு இன்று நல்ல நிலையில் உள்ளனர். முஸ்லிம் இளைஞர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்குடன் 1950 இல் வை.எம்.எம்.ஏ. இயக்கத்தை ஸ்தாபித்தார்.
13 வருட காலச் சிவில் சேவையிலிருந்து காலத்துக்கு முன்பாக ஓய்வுபெற்று ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் பதவியை 1948 இல் ஏற்ற அkஸின் தொடக்க வருடத்தில் இருந்த மாணவர் தொகை 1500 மட்டுமே. ஒரு கடமை வீரனான அkஸ் ஸாஹிராக் கல்லூரியின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்குக் கடுமையாக உழைத்தார். இதன் பலனாக கல்லூரியின் கல்வித்தரம் உயர்ந்தது. கிரிக்கெட், ரக்பி, உதைபந்தாட்டம், குத்தச் சண்டை ஆகிய விளையாட்டுத்துறைகளிலும் ஸாஹிராக் கல்லூரி திகழ்ந்தது. கல்லூரிக்கு மாணவர்களின் சேர்வு முன் என்றுமில்லாதவாறு உயர்ந்தது. முஸ்லிம் மாணவர்களும் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் இலங்கையின் எல்லாப் பாகங்களிலிருந்தும் ஸாஹிராக் கல்லூரியில் சேர்ந்தனர்.
முன்னொரு சமயம் மறைந்த பேராசிரியர் சிவத்தம்பி கலாநிதி அkஸின் அதிபர் பதவிக்காலப் பகுதியினுள் கல்வி கற்று இன்று பேரும் புகழுடனும் விளங்கும் முப்பத்தி மூன்று மாணவர்களைக் குறிப்பிட்டுள்ளார். சிவத்தம்பி அவர்கள் அவதானத்துடன் இப்பழைய மாணவர்கள் சிலர் மட்டுமே என்று கூறி உள்ளார். இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். அவர்களில் இருபது பேரின் பெயர்கள் வருமாறு:
இ. பரராச சிங்கம், எம்.வை. முஹம்மது, தர்மதாச பண்டா, பாரூக், சலீம், ஏ.சி.எம். தாசீம், காலஞ்சென்ற எம். அஜ்வத் ஹாசிம், ஹ¤சைன் ஹாசிம், எம். அஸ்ஹர், வாஸ் குணவர்தன, எம். பாகிர், காலஞ்சென்ற எம்.எஸ்.எம். நZம், எம். ஸக்கரிய்யா, றாசிக் ஸரூக், எம்.ஆர். தாசிம், எஸ்.பி.சி. தாசிம், ஜப்பர், கனக, எம்.ரி.எம். ஹம்சா, றிஷாத், இர்ஷாத் மற்றும் மெளஜுத் ஆவர். அத்துடன் அரசியல் முக்கியஸ்தர்களான ஏ.எச்.எம். பெளசி, அலவி மெளலானா, அஸ்வர் மற்றும் ஹ¤சைன் பைலா ஆகியோரையும் குறிப்பிடலாம்.
ஆங்கிலப் பிரபல கவிஞர் ஷேக்ஸ்பியரின் என்றும் நிலைபெற்றிருக்கும் கூற்று “சிலர் பிறப்பில் பெருந்தன்மை உடையவர்களாகவும், சிலர் பெரும் தன்மையை அடைந்து கொள்பவர்களாகவும், சிலருக்குப் பெருந்தன்மை திணிக்கப் படுவதாகும்” என்பதாகும். கலாநிதி அkஸ் கிழக்கிலங்கையின் உணவு உற்பத்தியை விரிவாக்கியதினாலும், இலங்கை முஸ்லிம் கல்விச்சகாய நிதியத்தை உருவாக்கியதினாலும் வை.எம்.எம்.ஏ. நிறுவனத்தை ஸ்தாபித்ததினாலும், இலங்கைப் பாராளுமன்றத்தின் செனேட் சபையில் ஆற்றிய பாரிய சேவையினாலும் ஒரு மாமனிதராக மேற்கூறிய இரண்டாவது வகையை அலங்கரிக்கின்றார்.
இலங்கை அரசும் பிரித்தானிய சாம்ராஜ்யமும் கலாநிதி அkஸை கெளரவித்துப் பட்டங்கள் வழங்கியுள்ளன.