ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் அது அவர்களின் சிந்தனையை சீர்குலைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. பரபரப்பான வாழ்க்கை முறையில் உள்ளவர்களுக்கு முடிவு எடுப்பதில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என ஒரு புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
80 வயதுக்கு மேற்பட்ட 90 வயதுக்கு உட்பட்ட நபர்கள் அதிக பயிற்சி செய்தால் கூட அவர்களது கேட்கும் திறன் மற்றும் முடிவு எடுக்கும் திறன் மேம்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அமெரிக்காவின் விக்கிடா கொம்யூனிகேஷன்ஸ் மற்றும் குறைபாடு துறை பேராசிரியர் ரேங்கல் தெரிவித்து உள்ளார். எனவே அன்றாடம் ஏதேனும் ஒரு பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுவது நமது செயல்பாடுகளை ஊக்குவிக்க உதவுவதை காணலாம்.
ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதால் உடல் பருமன் பிரச்சினை ஏற்படுவதுடன் சிந்தனை வேகமும் தீவிரம் இல்லாத மந்த நிலையை ஏற்படுத்தும், எந்த வயதிலும் சிறிய நடை பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது என ஆய்வு வலியுறுத்துகிறது.
0 comments:
Post a Comment